பஷில் நாடு திரும்பியமை முக்கிய செய்தியல்ல, எரிபொருள் விலையை குறைப்பதாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை - பிரசன்ன ரணதுங்க - News View

Breaking

Post Top Ad

Thursday, June 24, 2021

பஷில் நாடு திரும்பியமை முக்கிய செய்தியல்ல, எரிபொருள் விலையை குறைப்பதாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை - பிரசன்ன ரணதுங்க

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளமை ஒன்றும் முக்கியமான செய்தியல்ல. நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகிறது. எரிபொருள் விலையினை குறைப்பதாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார காரணிகளை கருத்திற் கொண்டு எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை உப குழுவின் தீர்மானத்திற்கு அமையவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.

தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டே பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றார். தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இதனை பிரதான செய்தியாக கருத முடியாது இதனை காட்டிலும் நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad