கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திர கட்சி ஆதரவளிக்காது : மஹிந்த அமரவீர - News View

Breaking

Post Top Ad

Thursday, June 24, 2021

கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திர கட்சி ஆதரவளிக்காது : மஹிந்த அமரவீர

(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகரிடம் கையளித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவளிக்கப் போவதில்லை என சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுற்றாடல்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான பிரச்சினை எம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே இந்த பிரச்சினையை அமைச்சரொருவர் மீது மாத்திரம் சுமத்துவது பொறுத்தமற்றது.

வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவை தீர்மானம் எடுக்குமாறு அமைச்சரவை அனுமதி வழங்கியது. வாழ்க்கை செலவு கூட்டத்தில் அமைச்சரவை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட சகலரும் கலந்துகொண்டனர். இதன் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. 

மாறாக அமைச்சர் உதய கம்மன்பில இந்த தீர்மானத்தை தனித்து எடுக்கவில்லை. எனவே அவருக்கு எதிராக எம்மால் செயற்பட முடியாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad