பிரபஞ்சத்தின் காமா கதிரை படம் பிடித்துள்ள விஞ்ஞானிகள் - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

பிரபஞ்சத்தின் காமா கதிரை படம் பிடித்துள்ள விஞ்ஞானிகள்

பிரபஞ்சத்தில் விண்மீன் இறந்து வெடித்துச் சிதறிய காமா கதிர் வெளிப்பட்டதை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர்.

ஜி.ஆர்.பி 190829 ஏ என்ற பெயர் கொண்ட காமா கதிர் கடந்த 2019ஆம் ஆண்டு வெடிக்க ஆரம்பித்தது. 

பூமியிலிருந்து சுமார் ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த பெரு வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதனை ஜெர்மன் வானியல் ஆய்வாளர்கள் சுப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு ஏற்பட்டு நட்சத்திரம் ஒன்று இறந்து கருந்துளையாக மாறும் போது இந்த காமா கதிர் வெடிப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். 

கடந்த 3 நாட்களாக இதனை ஆய்வு செய்ததாகக் கூறும் அறிவியலாளர்கள், ஆபிரிக்க நாடான நமீபியாவில் அமைக்கப்பட்டுள்ள உயர் ஆற்றல் கொண்ட தொலைநோக்கியின் உதவியுடன் காமா வெடிப்பு படம் பிடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad