இஸ்ரேல் பொலிஸாரால் அல் ஜசீரா பெண் நிருபர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

இஸ்ரேல் பொலிஸாரால் அல் ஜசீரா பெண் நிருபர் கைது

ஜெரூலசத்தில் அல் ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உட்பட 2 பேரை இஸ்ரேல் பொலிஸார் கைது செய்து நீண்ட நேரத்தின் பின் விடுவித்துள்ளனர்.

கிழக்கு ஜெரூசலத்தின் அண்டை நகரமான ஷேயிக் ஜாராவில் கடந்த 1967ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேல் அடக்குமுறை எதிர்ப்பு போராட்டத்தின் 54ஆவது ஆண்டு தினத்தையொட்டி பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அங்கு சனிக்கிழமை (5) செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பெண் நிருபரிடம் பொலிஸார் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு, அவரை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். 

மேலும் கெமரா உள்ளிட்ட கருவிகளையும் தூக்கி போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. 

“அவர்கள் அனைத்து பக்கங்களாலும் வந்தார்கள். அவர்கள் என்னை சுவரை நோக்கி ஏன் உதைத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று அந்த நிருபர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad