விண்வெளிக்கு பயணமான கணவாய் மீன் குஞ்சுகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

விண்வெளிக்கு பயணமான கணவாய் மீன் குஞ்சுகள்

நுண்பெருக்கியில் மட்டும் தெரியக்கூடிய 5,000 நுண்ணுயிரிகளும் 100 க்கும் அதிகமான கணவாய் மீன் குஞ்சுகளும் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றுடன் ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் கருவிகளும் ஸ்பேஸ் எக்ஸின் பல்கோன் 9 ரொக்கெட்டில் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டது. 

நுண்ணுயிரிகளுக்கும் கணவாய்களுக்கும் இடையிலான தொடர்பை, விண்வெளிப் பயணங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியாக இது உள்ளது.

கணவாய்களின் நோய் எதிர்ப்புச் சக்தி கிட்டத்தட்ட மனிதர்களைப் போன்றது.

நீண்ட விண்வெளிப் பயணங்களின்போது விண்வெளி வீரர்கள் தங்கள் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்குவதில் இந்த ஆராய்ச்சி உதவும் என்று நம்பப்படுகிறது. 

கணவாய்களுடன் நுண்பெருக்கியில் மட்டும் தெரியக்கூடிய நீர்கரடி என்று கூறப்படும் விலங்குகளும் விண்வெளிக்கு சென்றுள்ளன. அவை கடுமையான சூழல்களிலும் உயிர் வாழக்கூடியவை என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment