உலக உணவு விலை அதிவேகமாக உயர்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

உலக உணவு விலை அதிவேகமாக உயர்வு

உலக உணவு விலை கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக மாதந்த அடிப்படையில் வேகமாக உயர்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் உலகளாவிய உணவுச் செலவுகளின் தொடர்ச்சியான அதிகரிப்பு தொடர்பான குறீயிட்டை பயன்படுத்தியே ஐ.நா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பொருந்தொற்று காரணமாக உற்பத்தி, தொழிலாளர் மற்றும் போக்குவரத்து இடையூறினால் விநியோகஸ்தர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

பரந்தளவிலான பணவீக்கம் மற்றும் அதிகரித்துள்ள சில்லறைப் பொருட்களின் விலை உலக பொருளாதார மீட்சியில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது பற்றிய கவலை அதிகரித்துள்ளது.

இதில் தனியங்கள், எண்ணெய், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சீனி உட்பட உலகெங்கும் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை பற்றி ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆய்வு செய்துள்ளது.

வருடாந்த அடிப்படையில் உணவு விலை கடந்த மே மாதத்தில் 39.7 வீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 2010 ஒக்டோபர் தொடக்கம் மிகப்பெரிய மதாந்த அதிகரிப்பாக உள்ளது.

No comments:

Post a Comment