ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட ஆறு இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் இடம்பெறவில்லை...! - News View

About Us

About Us

Breaking

Friday, June 4, 2021

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட ஆறு இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் இடம்பெறவில்லை...!

இலங்கையில் உள்ள 6 இணையத்தளங்களில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதே தவிர சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட மேலும் சில இணையத்தளங்களில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

குறித்த இணையத்தளங்களை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (SLCERT) ஈடுபட்டு வருகிறது.

இதேவேளை, நேற்று முன்தினம் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mahindarajapaksa.lk என்ற இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த 6 இணையத்தளங்கள் மீதும் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் குறித்த இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் இடம்பெறவில்லையென்றும் அவை தொழிநுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment