கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டு பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டு பேருக்கு கொரோனா

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையில் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்கள் நாற்பத்தி எட்டு (48) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் நாற்பத்தி நான்கு (44) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இன்று இடம்பெற்றது. இதில் அன்டிஜன் பரிசோதனையில் எட்டு (08) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad