வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோரை பார்வையிட்ட அமைச்சர் அலி சப்ரி : இந்த பகுதிகள் ஆண்டுக்கு பலமுறை வெள்ளத்தை எதிர்கொள்வதால் நீண்டகால தீர்வுகள் காணப்பட வேண்டும் - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோரை பார்வையிட்ட அமைச்சர் அலி சப்ரி : இந்த பகுதிகள் ஆண்டுக்கு பலமுறை வெள்ளத்தை எதிர்கொள்வதால் நீண்டகால தீர்வுகள் காணப்பட வேண்டும்

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தால் இடம்பெயர்ந்த கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேச மக்களை நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பார்வையிட்டார்.

இன்று (06) பிற்பகல் கொலன்னாவை ரஜா மகா விகாரைக்கு விஜயம் செய்த ​​அமைச்சர், கொலன்னாவை ராஜ மகா விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பிரதேச பிரமுகர்களை சந்தித்து, இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டி வித்தியாவர்தன வித்தியாலயத்தில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாமுக்குச் சென்ற அமைச்சர், அங்குள்ள மக்களின் தேவைகள் குறித்து விசாரித்தார்.

கொலன்னாவையில் உள்ள ஜும்மா பள்ளிவாசலைப் பார்வையிட்டு அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் குறித்து விசாரித்தார்.

வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவது குறித்தும், வெள்ளம் குறைந்தவுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பொது இடங்களை எவ்வாறு சுத்தம் செய்வது குறித்தும் கொவிட்-19 தொற்று நோய்க்கான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு முகங்கொடுக்கும் பேரழிவுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பன குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த பகுதிகள் ஆண்டுக்கு பலமுறை வெள்ளத்தை எதிர்கொள்வதால், நீண்டகால தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், கொட்டிகாவத்த முல்லேரியாவா பிரதேச சபையின் தலைவரான ரங்கஜீவ ஜயசிங்க, துணைத் தலைவர் இந்துனில் ஜகத் குமார, எதிர்க்கட்சித் தலைவர் சாலிய விக்ரமசிங்க, மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அசோக லங்காதிலக மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் , அரச அதிகாரிகள் ஆகிய பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad