இளம்செழிய பல்லவன் மீண்டும் யாழ். போதனாவுக்கு மாற்றப்பட்டார் - News View

Breaking

Post Top Ad

Thursday, June 24, 2021

இளம்செழிய பல்லவன் மீண்டும் யாழ். போதனாவுக்கு மாற்றப்பட்டார்

யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து கொழும்புக்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் இளம்செழிய பல்லவன் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் (22) செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய போது கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபரை பிளாஸ்டிக் சத்திர சகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தியமை குறிப்பிடத்தக்கது.

கோப்பாய் குறூப் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad