ஐ.சி.சி. ஆண்கள் ஒருநாள் தரவரிசையில் துஷ்மந்த சமீர மற்றும் குசல் பெரேரா கணிசமான முன்னேற்றம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 4, 2021

ஐ.சி.சி. ஆண்கள் ஒருநாள் தரவரிசையில் துஷ்மந்த சமீர மற்றும் குசல் பெரேரா கணிசமான முன்னேற்றம்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மற்றும் அணித் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் எம்.ஆர்.எஃப் டயர்ஸ் ஐ.சி.சி ஆண்களின் ஒருநாள் வீரர் தரவரிசையில் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர்.

பங்களாதேஷ் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் சமீர 16 ஓட்டங்களுக்கு ஐந்து வீக்கெட்டுகளை வீழ்த்தியமை அவருக்கு போட்டியின் ஆட்ட நாயகன் விருதை பெற்றுக் கொடுத்தது.

29 வயதான சமீரா பங்களாதேஷ் தொடருக்கு முன்னதாக பட்டியலில் 72 ஆவது இடத்தில் இருந்தார். தொடரின் நிறைவின் பின்னர் அவர் 33 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதேநேரம் எம்.ஆர்.எஃப் டயர்ஸ் ஐ.சி.சி ஆண்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலின் வாராந்திர புதுப்பிப்பில் குசல் ஜனித் பெரேரா 13 இடங்கள் முன்னேறி 42 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

2016 ஜூன் மாதத்திற்கு பின்னர் இடது கை துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா தரவரிசையில் பெற்ற சிறந்த பெறுபேறு இதுவாவகும்.

தரவரிசையில் முன்னேறிய மற்றொரு இலங்கை வீரர் தனஞ்சய டி சில்வா ஆவார்.

பங்களாதேஷுடனான மூன்றாவது போட்டியில் அவர் பெற்றுக் கொண்ட 55 ஓட்டங்கள் அவரை 10 இடங்களுக்கு முன்னோக்கி கொண்டு சென்று 85 ஆவது இடத்தில் வைத்தது.

இதேவேளை துடுப்பாட்ட வீரர்கள் பட்டியிலில் பாபர் அசாம் 865 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், விராட் கோலி 857 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

அதேபோல் பந்து வீச்சாளர் பட்டியலில் ட்ரெண்ட் போல்ட் 737 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், மெய்டி ஹசான் 713 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

No comments:

Post a Comment