இலங்கையில் உள்ள அனைத்து சுகாதார சேவை தொழிற்சங்கங்களும் பணிப் பகிஷ்கரிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

இலங்கையில் உள்ள அனைத்து சுகாதார சேவை தொழிற்சங்கங்களும் பணிப் பகிஷ்கரிப்பு

இலங்கையில் உள்ள அனைத்து சுகாதார சேவை தொழிற்சங்கங்களும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன.

இன்று காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியுடன் நடைபெற்ற பேச்சு வெற்றியளிக்காத நிலையில், தாம் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக அனைத்து இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சருடனான பேச்சில் தமது முக்கியமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, தீர்வு வழங்க சுகாதார அமைச்சர் தவறிவிட்டார் என்றும் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு, தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பு கடமைகளுக்கு இலவசப் போக்குவரத்து வசதிகளை வழங்குதல், மருத்துவரர் அல்லாத சுகாதார ஊழியர்களுக்கு நியாயமான கொடுப்பனவை வழங்குதல், சுகாதாரத்துறை வெற்றிடங்களைப் பூரணப்படுத்த புதிய நியமனங்களை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்

No comments:

Post a Comment