புகையிரத சேவை நாளை முதல் முன்னெடுப்பு, பயணிகள் நெருக்கமாக பயணம் செய்வதை தவிர்க்கவும் - பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன - News View

Breaking

Post Top Ad

Thursday, June 24, 2021

புகையிரத சேவை நாளை முதல் முன்னெடுப்பு, பயணிகள் நெருக்கமாக பயணம் செய்வதை தவிர்க்கவும் - பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத போக்குவரத்து சேவை மாகாணத்திற்குள் மாத்திரம் நாளை முதல் முன்னெடுக்கப்படும். சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கருத்திற் கொண்டு பிரதான புகையிரத பாதையில் 4 புகையிதரங்கள் மேலதிகமாக சேவையில் ஈடுப்படுத்தப்படும். ஆகவே பயணிகள் புகையிரதத்தில் நெருக்கமாக பயணம் செய்வதை இயலுமான அளவில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

புகையிரத போக்குவரத்து சேவை குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு இன்று நாடு தழுவிய ரீதியில் அமுலில் இருந்த பயணத்தடை நாளை காலை தளர்த்தப்பட்டுள்ளது.

மாகாணத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் புகையிரத போக்குவரத்து சேவை இடம்பெறும். புகையிரதங்கள் மட்டுப்படுத்தப்பட்ட காரணத்தினால் பொது பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை அவதானிக்க முடிகிறது.

கடந்த மூன்று நாட்களும் அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டன. புகையிரத சேவையில் சமூக இடைவெளியை பேணுவது சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது.

பொது பயணிகள் நலனை கருத்திற் கொண்டு புகையிரத பயண சேவை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்மைய பிரதான புகையிரத பாதையில் மேலதிகமாக 4 புகையிரத பயணங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும்.

நாளை முதல் பிரதான புகையிரத பாதையில் 10 புகையிரத பயணமும், கரையோர புகையிரத பாதையில் 5 புகையிரத பயணமும், களனி வழி பாதையில் 5 புகையிரத பயணமும், புத்தளம் வழி பாதையில் 4 புகையிரத பயணமும் சேவையில் ஈடுப்படுத்தப்படும்.

புகையிரத சேவையினை பயன்படுத்தும் பொது பயணிகள் தங்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் ஒரு சில பயணிகள்பொறுப்பற்ற வகையில் செயற்படுதை அவதானிக்க முடிகிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad