போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் உயிரிழந்து விட்டதாக தகவல் - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் உயிரிழந்து விட்டதாக தகவல்

நைஜீரியாவின் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் உயிரிழந்து விட்டதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போகோ ஹராமினுக்கும் 'ISWAP' என்ற மேற்கு ஆபிரிக்க மாகாணத்தின் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கும் இடையே கடந்த மே 18 ஆம் திகதி மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அபுபக்கர் ஷெகாவ், மேற்கு ஆபிரிக்க மாகாணத்தின் இஸ்லாமிய ஆயுதக் குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார்.

எதிரிகள் சுற்றி வளைத்ததால் தன்னிடம் இருந்த வெடி‍ பொருட்களை வெடிக்கச் செய்து போகோ ஹராம் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை மேற்கு ஆபிரிக்க மாகாணத்தின் இஸ்லாமிய ஆயுதக் குழு சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் உறுதிபடுத்தியுள்ளது. 'ISWAP' என்பது போகோ ஹராமின் பிளவுபட்ட குழுவாகும்.

அவரது மரணம் நைஜீரியாவின் 12 காலமான ஜிஹாதி கிளர்ச்சியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது 40,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது மற்றும் வடகிழக்கில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர வழி வகுத்தது.

போகோ ஹராம் அவர்களின் தலைவரின் மரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதுடன் இந்த தகவலை விசாரிப்பதாக நைஜீரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

போகோ ஹராம் தனது போராட்டத்தை 2009 இல் வடகிழக்கு நைஜீரியாவில் ஆரம்பித்தது. ஆனால் பின்னர் அது அண்டை நாடான நைஜர், சாட் மற்றும் கமரூன் வரை பரவியமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad