எலிகளிலிருந்து பரவும் பிளேக் நோய் : அவுஸ்திரேலியாவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கைதிகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

எலிகளிலிருந்து பரவும் பிளேக் நோய் : அவுஸ்திரேலியாவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கைதிகள்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் எலிகளிலிருந்து பரவும் பிளேக் நோயின் காரணமாக சிறைச்சாலையொன்றிலிருந்து கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள வெலிங்டன் சிறைச்சாலையிலே 400 க்கும் மேற்பட்ட கைதிகள் மற்றும் 200 ஊழியர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த சிறைச்சாலையில் மின்சார வயர்கள் மற்றும் உட்புற கூரை உள்ளிட்ட உட்கட்டமைப்பில் எலிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 10 வருடங்களில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் பிளேக் நோயால் மோசமான பாதிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் தானிய அறுவடை பகுதியில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து பல மாதங்களாக அழிவை ஏற்படுத்தி வருகின்றன.

சிலைச்சாலைகள் 4 மாதங்களுக்கு மூடப்படும். சுத்தம் செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் இடம்பெற்று, எதிர்கால பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கப்படும் என மாநில சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிளேக் நோய் மாநிலம் முழுவதும் மோசமடைந்துள்ளதால் கடந்த வாரங்களில் தொற்று தீவிரமடைந்துள்ளது.

இதேவேளை, குயின்ஸ்லாந்து, விக்டோரியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா மாநிலங்களும் எலிகளின் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளன.

நியூ சவுத் வேல்ஸில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வீடுகளில் தொற்றுநோய்கள் பரவியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

No comments:

Post a Comment