இலங்கையின் 4 மாகாணங்களில் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு - 4 மாவட்டங்களில் அவ்வப்போது இடியுடன் மழைக்கு சாத்தியம் - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

இலங்கையின் 4 மாகாணங்களில் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு - 4 மாவட்டங்களில் அவ்வப்போது இடியுடன் மழைக்கு சாத்தியம்

இலங்கையின் மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad