யாழ்ப்பாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரிப்பு : இதுவரை 48 உயிரிழப்புக்கள் - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

யாழ்ப்பாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரிப்பு : இதுவரை 48 உயிரிழப்புக்கள்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க அதிபர் மேலும் கூறியுள்ளதாவது, ‘யாழ்ப்பாணத்தில் நேற்று மாத்திரம் 92 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இதுவரையான காலப்பகுதியில் 48 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை நல்லூர் மற்றும் உடுவில் பகுதிகளிலுள்ள 3 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad