இந்திய விமானிகள் 17 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, June 4, 2021

இந்திய விமானிகள் 17 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் உச்சத்தை இந்திய நாடு கண்ட மே மாதத்தில் ஏயர் இந்தியா, இண்டிகோ மற்றும் விஸ்டாரா ஆகியவற்றின் 17 விமானிகள் கொவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இண்டிகோ 10 விமானிகளையும் விஸ்டாரா இருவரையும் இழந்தது என்று இந்திய விமானத்துறை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

அதேநேரம் தேசிய விமான சேவையான ஏயர் இந்தியாவில் ஐந்து சிரேஷ்ட விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இந்தியாவில் வியாழனன்று 1,32,364 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த கொவிட்-19 நோயளர்களது எண்ணிக்கை 2,85,74,350 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை, 2,65,97,655 பேர் தொற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளனர், ஒரு நாளில் மேலும் 2,07,071 மீட்புகள் பதிவாகியுள்ளன. தொடர்ச்சியாக 22 நாட்களுக்கு தினசரி புதிய வழக்குகளை விட அதிகமான தினசரி மீட்டெடுப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் நேற்று 2,713 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,40,702 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் 2,07,071 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,65,97,655 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 16,35,993 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment