இலங்கையில் சீரற்ற வானிலையால் 17 பேர் உயிரிழப்பு : 67,613 குடும்பங்களைச் சேர்ந்த 2,71,110 பேர் பாதிப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

இலங்கையில் சீரற்ற வானிலையால் 17 பேர் உயிரிழப்பு : 67,613 குடும்பங்களைச் சேர்ந்த 2,71,110 பேர் பாதிப்பு

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலை காரணாமக உண்டான அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைவத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

வெள்ளம், மண்சரிவு, பலத்த காற்று, மரம் முறிந்து வீழ்தல் போன்ற சீரற்ற காலநிலையினால் உண்டான அனர்த்தங்கள் காரணமாக நாடு முழுவதும் 67,613 குடும்பங்களைச் சேர்ந்த 2,71,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 88 பிரதேச செயலாளர் பிரிவுகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தோர் - 05
காணாமல்போனவர்கள் - 02
முழுமையாக சேதமடைந்த வீடுகள் - 17
பகுதியளவிலான வீடுகள் சேதம் - 978
பாதுகாப்பான நிலையங்கள் - 106
பாதுகாப்பான நிலையங்களில் உள்ள குடும்பங்கள் - 6,177
பாதுகாப்பான நிலையங்களில் உள்ள நபர்கள் - 26,806
உறவினர்களின் வீடுகளில் உள்ள குடும்பங்கள் - 5,710
உறவினர்களின் வீடுகளில் உள்ள நபர்கள் - 22,975

No comments:

Post a Comment

Post Bottom Ad