மட்டக்களப்பு மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (11.06.2021) 103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோறும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் வீதியில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்தோர், நடமாடும் வியாபாரம் செய்தோர் ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சீ.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

களுவான்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில 18 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செங்கலடி 03 பேரும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கிரான் 03 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், பொலிஸ் அதிகாரி ஓருவரும், மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒருவருமாக மொத்தம் 103 பேர் கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad