இம்முறையும் பெருநாள் தொழுகை வீட்டிலேயே - பள்ளிவாசல்கள், பொது இடங்களில் அனுமதி இல்லை - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

இம்முறையும் பெருநாள் தொழுகை வீட்டிலேயே - பள்ளிவாசல்கள், பொது இடங்களில் அனுமதி இல்லை

நோன்புப் பெருநாள் தொழு­கையை பள்­ளி­வா­சல்­க­ளிலோ அல்­லது பொது இடங்­க­ளிலோ கூட்­டாக நிறை­வேற்ற முடி­யாது என்றும் வீட்டிலேயே தொழு­து­ கொள்­ளு­மாறும் வக்பு சபை அறி­வுறுத்தியுள்ளது. 

ஏற்­க­னவே அமு­லி­லுள்ள சுகா­தார வழி­காட்­டல்­க­ளுக்­க­மை­யவே நோன்புப் பெருநாள் தினத்­தன்றும் முஸ்­லிம்கள் நடந்துகொள்ள வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

‘‘பள்­ளி­வா­சல்­களில் தராவிஹ், ஜும்ஆ, பெருநாள் தொழுகை ஆகிய கூட்­டுத் ­தொ­ழு­கை­களை தொழ முடி­யாது. பள்­ளி­வா­சல்­களில் தனித்தனியே ஒரே தட­வையில் தொழு­வது 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்­ளது. 

சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவின் சுற்று நிரு­பத்தில் இது பற்றி தெளி­வாகக் குறிப்பிடப்பட்­டுள்­ளது’’ என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

Vidivelli

No comments:

Post a Comment