மீன் போன்ற கடலுணவை உற்கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை, கப்பல் சட்ட ரீதியாக துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவே திட்டமிடப்பட்டிருந்தது - சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

மீன் போன்ற கடலுணவை உற்கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை, கப்பல் சட்ட ரீதியாக துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவே திட்டமிடப்பட்டிருந்தது - சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை

மீன் போன்ற கடலுணவை உற்கொள்வதில் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென்று சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி திருமதி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் இலங்கையின் சமுத்திர சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சம்பவம் மிகவும் கவலைக்குரியதாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கப்பலின் இடிபாடுகள் குவிந்து கிடக்கும் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்வது மிகவும் கடினமான பணியாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இவை திக்கோவிற்றவில் இருந்து சிலாபம் கடற்கரை வரையில் கடல் ஊடாக அடித்துச் சென்றிருப்பதாக முன்னர் அறிந்தோம் ஆனால் தற்போது இந்த கழிவுகள் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய, அங்குலான, மொரட்டுவை வரையில் சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. இவற்றை சுத்தம் செயவதற்கு நீண்ட காலம் செல்லும். 

இந்த கப்பல் சட்ட ரீதியில் எமது துறைமுகத்திற்கு வந்த கப்பல். இதேபோன்று இந்த கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. 

இதிலுள்ள சுமார் 15 கொள்கலன்கள் இலங்கை நிறுவனங்களின் தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக விநியோகிகப்படவிருந்தன. இதனால் ஏனைய துறைமுகங்களினால் நிராகரிக்கப்பட்ட கப்பலை நாம் ஏற்றுக் கொண்ட ஒன்றல்ல என்றும் திருமதி தர்ஷனி லஹதபுர தெளிவுபடுத்தினார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

No comments:

Post a Comment