இரட்டிப்பாக்கப்பட்டுள்ள இலங்கையின் கடல் சார் பாதுகாப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

இரட்டிப்பாக்கப்பட்டுள்ள இலங்கையின் கடல் சார் பாதுகாப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழலில், கடல் மார்க்கமாக இலங்கைக்குள் சட்டவிரோதமாக எவரும் நுழைவதை தடுக்கும் பொருட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை கடற்படையினர் இரட்டிப்பாக்கியுள்ளனர்.

வடக்கு மற்றும் வட மேல் கடற்பரப்பின் பாதுகாப்பு முதலில் பலபப்டுத்தப்பட்ட போதும் தற்போதைய சூழலில் நாட்டை சூழ கடற் பரப்பின் பாதுகாப்பை பலப்படுத்தி, அதனை இரட்டிப்பாக்கியுள்ளதாக கடற்படை தலைமையகம் தெரிவித்தது.

அதன்படி 24 மணி நேர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

ரோந்து மற்றும் இதர பணிகளில் ஈடுபடுத்தப்படும் படகுகள், அதிகாரிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடற் பரப்புக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, கரையோரம் மற்றும் ஆழ் கடலில் கடற்படை படகுகள், கண்காணிப்பு கப்பல்கள் ஊடாக பூரண மேற்பார்வைகளை முன்னெடுக்கவும், சர்வதேச கடற்பரப்பினில் கடற்படையின் அதிவேக படகுகள் மற்றும் தாக்குதல் படகுகளை கடமையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment