சீனாவில் இருந்து வரும் புறாக்களை வேட்டையாடுமாறு வட கொரியா உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 30, 2021

சீனாவில் இருந்து வரும் புறாக்களை வேட்டையாடுமாறு வட கொரியா உத்தரவு

வட கொரியாவில் சீனாவில் இருந்து வரும் புறாக்கள் கொரோனாவை பரப்புவதாகக் கூறி வேட்டையாட உத்தரவிடப்பட்டுள்ளது.

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் புறாக்களுக்கு எதிராக ஒரு போரை அறிவித்துள்ளார்.

புறாக்கள் அயல் நாடான சீனாவிலிருந்து கொரோனாவை பறப்புவதாக அவர் நம்புகிறார்.

இதை தொடர்ந்து சீன எல்லையில் வசிக்கும் எல்லை நகரவாசிகள் துப்பாக்கிக்கியால் புறாக்களை சுட்டு கொன்று குவித்து வருகிறார்கள்.

அதுபோல் பூனைகளும் கொரோனாவை பரப்புவதாக அதனையும் வேட்டையாட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹைசன் மற்றும் சினுஜு ஆகிய நகரங்களில் உள்ள அதிகாரிகள் புறாக்களையும், பூனைகளையும் வேட்டையாட நகர மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஹைசனில் ஒரு பூனையை ரகசியமாக வளர்த்ததற்காக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.

மேலும் இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பின் பூனையின் உரிமையாளர்கள் சிறை வைக்கப்பட்டனர். அந்த குடும்பத்திற்கு 20 நாட்கள் தண்டனை வழங்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment