கபில நுவன் அத்துக்கோரல எம்.பி க்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Saturday, May 29, 2021

கபில நுவன் அத்துக்கோரல எம்.பி க்கு கொரோனா

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரலவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது கந்தளாய் பிரதேசத்தில் இருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை அவருடைய பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad