சிரியாவின் பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

சிரியாவின் பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து!

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் அமைந்துள்ள பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீய‍ை அணைக்கும் பணியில் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பம்பிங் ஸ்டேஷனில் கசிவு ஏற்பட்டதால் ஒரு வடிகட்டுதல் பிரிவில் தீ வெடித்ததுள்ளது என ஆரம்கட்ட தகல்வகள் கூறுகின்றன.

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், தீயை அஅணைக்க தீயணைப்பு குழுக்கள் விரைந்து செயற்பட்டு வருவதாகவும் ஹோம்ஸ் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிப்பாளர் சுலைமான் மொஹமட் ஹால் உறுதிபடுத்தினார்.

ஹோம்ஸ் சுத்திகரிப்பு நிலையம் சிரியாவில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும்.

மேலும் இது ஒரு நாளைக்கு 110,000 பீப்பாய்கள் கொள்ளளவுடன் இயங்குகிறது, இது இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களிலும் சிறியது.

மற்றைய பனியாஸ் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 130,000 பீப்பாய்களை உற்பத்தி செய்கிறது.

No comments:

Post a Comment