கப்பல் தீ விபத்தினால் கடற்பரப்பு, சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மதிப்பட ஒரு மாதம் செல்லும் - அமைச்சர் மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Saturday, May 29, 2021

கப்பல் தீ விபத்தினால் கடற்பரப்பு, சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மதிப்பட ஒரு மாதம் செல்லும் - அமைச்சர் மஹிந்த அமரவீர

எம்.மனோசித்ரா

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக கடற்பரப்பு மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கையொன்றை தயாரிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனினும் இந்த மதிப்பீடுகளை முழுமையாக செய்து முடிப்பதற்கு குறைந்தது ஒரு மாத காலமேனும் செல்லும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன மற்றும் நாலக கொடஹேவ ஆகியோர் நீர்கொழும்பு கடற்கரை பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டதன் பின்னரே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு குறித்த கப்பலுக்கு உரித்துடைய நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனம் என்பவற்றுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நஷ்டஈடு பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுமாயின் அது கடல் சூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது கப்பலினால் கடலில் கலந்துள்ள கழிவுகளை அகற்றுவதே துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும். இதன் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மதிப்பிடுவதற்கு சுமார் ஒரு மாத காலமேனும் செல்லும். இவ்வாறு கடலில் கலந்துள்ள கழிவுகளை அகற்றுவதற்காக 600 கடற்படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment