எமது காவலன் ஹரீஸ் எம்.பிக்கு நாங்கள் எப்போதும் பக்க பலமாக இருப்போம் : மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ. சத்தார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

எமது காவலன் ஹரீஸ் எம்.பிக்கு நாங்கள் எப்போதும் பக்க பலமாக இருப்போம் : மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ. சத்தார்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கபட நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சாணக்கியனின் முகத்தில் பாராளுமன்ற உரை மூலம் கரி பூசினார் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹரீஸ் என்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ. சத்தார் தெரிவித்தார்

நேற்று பாராளுமன்ற அமர்வில் நடைபெற்ற விவாத உரைகளின் போது நடைபெற்ற வாதப்பிரதிவாத உரை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கல்முனையில் முஸ்லிம்கள் வாழும் நிலங்களை பறித்து தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நீண்ட கால திட்டத்தை இனவாதிகள் தீட்டி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் முகமாக கடந்த வாரம் கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அப்பாவி தமிழ் இளைஞர்களை அழைத்து முஸ்லிம்களுக்கு எதிரான விஷக் கருத்துக்களை விதைத்து தமிழ் முஸ்லிம் இன முரண்பாட்டை தோற்றுவிப்பதற்கு முனைந்துள்ளார்.

அத்தோடு நின்று விடாமல் நான்காம் திகதி (நேற்று) நடைபெற்ற பாராளுமன்றத் தொடரில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக அம்மக்கள் மத்தியில் வாக்குறுதி அளித்திருந்தார். இதனை அறிந்த எமது மண் ஈன்றெடுத்த தலைமகன் ஹரீஸின் சாமர்த்திய காய்நகர்த்தலின் மூலம் அரசாங்கத்தின் பேரதரவுடன் கல்முனை மண்ணையும் மக்களையும் பாதுகாத்து சாணக்கியனின் வஞ்சகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அவரின் முகத்தில் கரியை பூசினார்.

தமிழ் மக்கள் மத்தியில் தன்னை பெரும் வீரனாக காட்டிய சாணக்கியன் இன்று புறமுதுகு காட்டி ஒடியதன் மூலம் புலியல்ல தான் பூனை என்பதையும் ஏற்றுக் கொண்டார். இன்று கல்முனை மண் பாதுகாக்கப்பட்டருப்பது சட்டத்தரணி ஹரீஸின் ஆளுமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். எனவே இந்த கல்முனை மண் ஹரீஸின் ஆற்றல்களுக்கும் வீரத்திற்கும் தலை வணங்குகிறது. 

இருந்தாலும் தனி மனிதனாக களத்தில் நின்று போராடும் எமது காவலன் ஹரீஸ் எம்.பிக்கு நாங்கள் எப்போதும் பக்க பலமாக இருப்போம். முஸ்லிம் விரோத சக்திகளை விரட்டியடிக்க நாம் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டுமென மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ. சத்தார் இதன்போது மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

நூருல் ஹுதா உமர்

No comments:

Post a Comment