காத்தான்குடி பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அன்பான வேண்டுகோள்...! - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

காத்தான்குடி பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அன்பான வேண்டுகோள்...!

எம்.எஸ்.எம்.நூர்தீன்

அன்புப் பொதுமக்களுக்கு காத்தான்குடி நகருக்கான Covid-19 தடுப்பு செயலணி விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

தற்போது நாட்டில் கொரேனா 3ஆம் அலை மிகத்தீவிரமாக பரவி வருவது தொடர்பில் நேற்று (08) சனிக்கிழமை காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய பின்வரும் விடயங்களை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

காய்ச்சல், கடுமையான தலைவலி, தொண்டை வலி, மூச்செடுப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியசாலையை நாடுவதுடன் குறிப்பாக கற்பிணித் தாய்மார்கள் மிகவும் அவதாத்துடன் செயற்படவும்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் யாசகத்திற்காக வீடுகளுக்குச் செல்வது, வீதிகளில் அலைவது என்பன தடை செய்யப்பட்டுள்ளதுடன் சதகா, பித்ரா விடயத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஏழை எளியவர்கள், உறவினர்கள் தொடர்பில் முன்னுரிமை வழங்கவும்.

இன்று முதல் கடற்கரை, ஆற்றங்கரை, மைதானம் போன்ற பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவது மறு அறிவித்தல் வரை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாயல்கள் ஐவேளைத் தொழுகைக்காக அதான் சொன்னதிலிருந்து அரை மணித்தியாலம் மாத்திரம் திறக்கப்பட்டு ஜமாஅத் தொழுகையுடன் மூடப்படுதல் வேண்டும்.

தற்போது வீடுகளில் அதிகளவானோர் கூடி நின்று இரா வணக்கங்களில் ஈடுபடுவதை தவிர்த்து தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் சுருக்கிக் கொள்ள வேண்டும்.

பொதுமக்களை அழைத்து லைலத்துல் கத்ர் 27ஆம் இரவு, கியாமுல் லைல், தஸ்பிஹ் தொழுகை, சஹர் போன்ற எந்த நிகழ்வுகளும் பள்ளிவாயல்களிலோ தனிப்பட்ட ரீதியிலோ செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.

குறிப்பாக இளைஞர்கள் வீதிகளில் வீணாக சுற்றித்திரிவது, உணவகங்களுக்கு முன்னால் கூடி நிற்பது முற்றாக தடை செய்யப்படுவதுடன் இது தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துமாறும் வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் (11) மறு அறிவித்தல் வரை அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த சகல வர்த்தக நிலையங்களும் மாலை 6 மணியுடனும், அத்தியவசிய சேவைகள் இரவு 9 மணியுடனும் மூடப்படுதல் வேண்டும். 

அத்துடன் சகல உணவகங்களிலும் Takeaway மாத்திரம் அனுமதிக்கப்படுவதோடு எக்காரணம் கொண்டும் உள்ளிருந்து எவரும் உணவருந்த (இப்தார் உட்பட) அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தீவீர நிலைமையை கருத்திற்கொண்டு முழு நாடும் முடக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதால் இறுதி நேர அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ளும் முகமாக பொதுமக்கள் பெருநாள் கொள்வனவுகளை முன்கூட்டியே மேற்கொள்ளவும்.

பெருநாள் தினத்தன்று அத்தியவசிய தேவைகள் உற்பட சகல வர்த்தக நிலையங்களும் மூடப்படல் வேண்டும் என்பதோடு, மீறுவோருக்கு எதிராக பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்டாசு விற்பனை செய்தல், பயன்படுத்துதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களது வியாபார உரிமம் ரத்துச் செய்யப்படும்.

பள்ளிவாயல்களிலோ திடலிலோ கூட்டாக பெருநாள் தொழுகை தொழ முடியாது என்பதுடன் வீடுகளிலேயே தொழுது கொள்ளவும்.

பெருநாள் ஒன்று கூடல்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்லல் என்பன தடை செய்யப்பட்டள்ளது.

திருமணம், அது தொடர்பான ஒன்று கூடல், வலிமா போன்ற சகல நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

வெளியூர் சுற்றுலா பயணங்கள் செல்வதோ, உள்ளூருக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் அறைகள், வீடுகள் வாடகைக்கு கொடுப்பதும் மறு அறிவித்தல் வரை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

புனித மிக்க ரமலான் மாதத்தில் அன்புப் பொதுமக்களாகிய எமது தாய் தந்தையர் சகோதர சகோதரிகள், குழந்தைகள் போன்றோரை மேற்படி கொடிய ஆட் கொல்லி நோயான கொரேனா அரக்கனிடமிருந்து பாதுகாக்கவே இவ்வாறான கடுமையான தீர்மானங்களை எடுப்பதற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்பதோடு இதற்கு ஒத்துழைப்பது எம் அனைவர் மீதுமான ஒரு மிகப் பெரிய சமூகக் கடமையுமாகும்.

எனவே பொதுமக்கள் சுகாதார, பாதுகாப்புப் பிரிவினரின் சகல அறிவுறுத்தல்களையும் முறையாக பின்பற்றி முடியுமான தியாகங்களை செய்து இந்த கொடிய கொரேனா நோயினை வெற்றி கொள்ள ஒத்துழைத்து எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

நன்றி
இவ்வண்ணம்,
காத்தான்குடி நகருக்கான Covid–19 தடுப்பு செயலணி.

No comments:

Post a Comment