சுகாதார விதிமுறைகளை மீறி வெளி மாகாணங்களில் இருந்து மாளிகைக்காட்டுக்குள் நுழைந்தோர் மீது நடவடிக்கை ! - News View

About Us

About Us

Breaking

Saturday, May 29, 2021

சுகாதார விதிமுறைகளை மீறி வெளி மாகாணங்களில் இருந்து மாளிகைக்காட்டுக்குள் நுழைந்தோர் மீது நடவடிக்கை !

மாளிகைக்காடு நிருபர்

நாட்டிலும் குறிப்பாக கிழக்கிலும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மாளிகைக்காட்டு பிரதேசத்தில் மேற்கொண்ட 50 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்றும் எதிர்வரும் நாட்களில் இறுக்கமான சுகாதார நடைமுறையினை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் மற்றும் கொரோனோ ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான சம்மாந்துறை பொலிஸார், பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு அண்டிஜென் பரிசோதனையின்போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. 

வீதியில் உலாவித்திரிந்தோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோர், சுகாதார நடைமுறைகளைப் பேனாதோர் என பலருக்கும் மேற்கொண்ட இந்த பரிசோதனையில் எவருக்கும் தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் மேலும் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளின் போது முறையான அனுமதிகளை பெறாமல் நீர்கொழும்பு பிரதேசத்திலிருந்து மீன் வியாபாரத்திற்காக மாளிகைக்காடு மீன்பிடி துறைக்கு வந்தவர்கள் சம்மாந்துறை பொலிஸாரால் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment