நாட்டை முற்றாக முடக்கும் எண்ணம் இல்லை - மாகாணங்களிடையே போக்குவரத்து மட்டுப்பாட்டுக்கு யோசனை - தற்போது 153 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில் - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

நாட்டை முற்றாக முடக்கும் எண்ணம் இல்லை - மாகாணங்களிடையே போக்குவரத்து மட்டுப்பாட்டுக்கு யோசனை - தற்போது 153 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில்

நாட்டை முற்றாக முடக்கும் எண்ணம் இதுவரை இல்லை என, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆயினும் எதிர்வரும் சில தினங்களுக்கள், மேல் மாகாணம் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட மாகாணங்களிடையே, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்துகளுக்கு மட்டுப்பாடு விதிக்க யோசனை செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது 163 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில் உள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்கனவே 151 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில் இருந்த நிலையில், இன்று (10) முற்பகல் 6.00 மணி முதல், கம்பஹா, அம்பாறை, இரத்தினபுரி, களுத்துறை, மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், திருகோணமலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே முடக்க நிலையில் இருந்த 14 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நாட்டில் தற்போது 163 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment