இலங்கையில் 130 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று; இருவரின் நிலை கவலைக்கிடம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

இலங்கையில் 130 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று; இருவரின் நிலை கவலைக்கிடம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வரும் 130 கர்ப்பிணித் தாய்மார்களில், இரண்டு தாய்மார்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் தாய் மற்றும் குழந்தை நல பணிப்பாளரான வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களில் பெரும்பாலானோர் முல்லேரியா, நெவில் பெர்னாண்டோ மற்றும் ஹோமாகம ஆகிய வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்ப்பிணித் தாய்மார்கள் முடிந்தவரை வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment