மட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, May 9, 2021

மட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சோ்ந்த ஆண் ஒருவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனை பிரதேச காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

செங்கலடியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறியுள்ளார்.

பின்னர் குறித்த நபர் வீடு திரும்பாத காரணத்தால் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று (09) வாழைச்சேனை முறுத்தானை வயலை அண்டிய காட்டுப் பகுதியில் சடலம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இருப்பதாக அந்த பகுதியில் விவசாய நடவடிக்கைக்குச் சென்றவர்களால் வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் கடந்த 27 ஆம் திகதி காணாமல் போன செங்கலடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment

Post Bottom Ad