கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 125 பேர் மரணம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 125 பேர் மரணம்

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 125 பேர் மரணமடைந்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.​

கொவிட்-19 இரண்டாவது அலையில் 25 பேரும், மூன்றாவது அலையில் 100 பேரும் மரணமடைந்துள்ளதாகவும், திருகோணமலை மாவட்டத்தில் 71 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பேரும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 16 பேரும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 13 பேருமாக 125 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொவிட்-19 03வது அலையின் தாக்கம் கிழக்கு மாகாணத்தில் மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுள்ளார்.

பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்கள் வெளியில் செல்ல வேண்டாமெனவும், வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை கடைப்பிடிக்குமாறும், தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை கடைப்பிடிக்காதவர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

சுகாதார பகுதியினராலும், பொலிஸாரினாலும் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை சிலர் உதாசீனம் செய்து வருவதால் கொவிட்-19 தொற்றின் தாக்கம் மிக வேகமாக பரவிவருகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 154 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதோடு, அவதானத்திற்குரிய வலயங்களாக மட்டக்களப்பு, திருகோணமலை, கிண்ணியா, மூதூர், குறுஞ்சாங்கேணி ஆகிய 05 வைத்தியதிகாரி பிரிவுகள் இவ்வாரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுள்ளார்.

எம்.எஸ்.எம்.நூர்டீன் 

No comments:

Post a Comment