கிழக்கு மாகாண முஸ்லிம் ஆசிரியர்ளுக்கான பெருநாள் முற்பணம் 10 ஆம் திகதி வழங்கப்படும் - பிரதம கணக்காளர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

கிழக்கு மாகாண முஸ்லிம் ஆசிரியர்ளுக்கான பெருநாள் முற்பணம் 10 ஆம் திகதி வழங்கப்படும் - பிரதம கணக்காளர்

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண முஸ்லிம் ஆசிரியர்களுக்குரிய நோன்புப் பெருநாள் முற்பணம் எதிர்வரும் திங்கட்கிழமை 10 ஆம் திகதி வலயக் கல்வி அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுமென கிழக்கு மாகாண கல்வி திணைக்கள பிரதம கணக்காளர் எம்.ஏ. ரபீக் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாகாண கல்வி திணைக்கள நிருவாக நடவடிக்கைகள் கடந்த இரு வாரங்களாக பாதிக்கப்பட்டுள்ளமை, திறைசேரி மூலம் பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் என்பனவே முற்பணம் வழங்குவதில் தாமத நிலையேற்பட்டது எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிசாம் அவர்களும் தானும் எடுத்த முயற்சி காரணமாக மாகாண திறைசேரி மூலமாக தற்போது பணம் வழங்கப்பட்டு உள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 10 ஆம் திகதி ஆசிரியர்களுக்கு பெருநாள் முற்பணத்தினை வழங்க ஆயத்தமாக இருக்குமாறு சகல வலயக் கல்வி அலுவலக கணக்காளர்களும் ஆயத்தமாக இருக்குமாறு தாம் கேட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நோன்பு பெருநாள் முற்பணம் வழங்காமை குறித்து இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் வினவிய போதே இத்தகவல் பிரதம கணக்காளர் றபீக்கால் தரப்பட்டது.

No comments:

Post a Comment