திருகோணமலை, கம்பஹா, களுத்துறையில் சில பிரசேதங்கள் மற்றும் தம்புள்ளை பொருளதார மத்திய நிலையம் ஆகியன தனிமைப்படுத்தல்! - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

திருகோணமலை, கம்பஹா, களுத்துறையில் சில பிரசேதங்கள் மற்றும் தம்புள்ளை பொருளதார மத்திய நிலையம் ஆகியன தனிமைப்படுத்தல்!

கொரோனா அச்சுறுத்தல் நிலையையடுத்து நாட்டின் சில பகுதிகள் இன்று திங்கட்கிழமை இரவு 08.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (26) இரவு 8.00 மணி முதல் திருகோணமலை, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் உள்ள சில கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று இரவு 08.00 மணி முதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்றிரவு 8.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்

திருகோணமலை
பூம்புஹார்

கம்பஹா
பொல்ஹேன, ஹீரலுகெதர, களுஅக்கல, அஸ்வென்னவத்த கிழக்கு

களுத்துறை
மிரிஸ்வத்த , பெலவத்த வடக்கு, கிழக்கு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்

No comments:

Post a Comment

Post Bottom Ad