பள்ளிவாயல்களில் பெண்கள், முதியவர்கள், சிறுவர்களுக்கு தொழுகை முற்றாகத் தடை - விதிமுறைகளை மீறி நடப்போருக்கெதிராக சட்ட நடவடிக்கை : கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

பள்ளிவாயல்களில் பெண்கள், முதியவர்கள், சிறுவர்களுக்கு தொழுகை முற்றாகத் தடை - விதிமுறைகளை மீறி நடப்போருக்கெதிராக சட்ட நடவடிக்கை : கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தாக்கத்தின் காரணமாக கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து காணப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ரமழான் காலத்தில் பொதுமக்களின் கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி அவசர கூட்டம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, முஸ்லிம் சமூக பண்பாட்டலுவல்கள் திணக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.சியாத், மேற்பார்வை பொது சகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொது சகாதார சுகாதார பரிசோதகர்கள், பள்ளிவாயல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், ஆகியோர் கலந்து கொண்டு

மே 31 வரை கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது நிலை ஆபத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளைத் தவிர பல் அங்காடிகள், நிதி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 வீதமாக பேணுதல், ரமழான் காலம் என்பதால் பள்ளிவாயல்களில் தொழுகைக்கு 50 பேருக்கு அனுமதி, உணவகங்களில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதம் அனுமதி, மரண வீட்டில் உச்ச பட்சம் ஒரு தடவையில் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி, பொதுமக்கள் ஒன்றுகூடலுக்கு அனுமதி இல்லை, களியாட்டங்கள், இசை நிகழ்வுகள், கடற்கரை விருந்துபசாரங்கள் மூடப்பட்டிருக்கும், நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டிருக்கும் போன்ற் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தற்போது ரமழான் காலமாக உள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் பிரதேசத்தில் பரவாத நிலையில் பொதுமக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளை பின்றபற்றி நடந்து கொள்ள வேண்டும்.

அத்தோடு பள்ளிவாயல்களில் பெண்களுகள், முதியவர்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு தொழுகை முற்றாகத் தடை செய்யப்படும், வெளி இடங்களில் இருந்து வருகை தந்தால் சுகாதார திணைக்களத்திடம் அறிவிக்க வேண்டும்.

ரமழான் காலம் என்பதால் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரஸ் தாக்கம் பரவாத நிலையில் நடந்து கொள்ள வேண்டும், சுகாதார விதிமுறைகளை மீறி நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment