இறக்குமதி செய்யப்படும் பொருட்களை பரிசோதிக்கும் வரை அவற்றை சுங்கப் பிரிவில் வைத்திருக்க புதிய களஞ்சியத் தொகுதி - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை பரிசோதிக்கும் வரை அவற்றை சுங்கப் பிரிவில் வைத்திருக்க புதிய களஞ்சியத் தொகுதி

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தரச்சான்றிதழ் கிடைக்கும் வரை சுங்கப் பிரிவில் வைத்திருப்பதற்காக புதிய களஞ்சியத் தொகுதியொன்றை அமைப்பதற்கு இலங்கை சுங்கப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளது.

இதற்காக கெரவலப்பிற்றி பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பைக் கொள்வனவு செய்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை காலமும் தரச்சான்றிதழ் கிடைக்கும் வரை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இறக்குமதியாளரின் களஞ்சியங்களில் வைக்கப்பட்டிருந்தன. 

எனினும் இது பாதுகாப்பற்றது என்பது புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட விடயத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.

இது தொடர்பில் கவனம் செலுத்திய சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் விஜித்த ஹரிப்பிரிய கடந்த பெப்ரவரி மாதம் இந்தக் காணியைக் கொள்வனவு செய்து தேவையான நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment