இந்தியாவுடனான எல்லையை மூடியது பங்களாதேஷ் - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

இந்தியாவுடனான எல்லையை மூடியது பங்களாதேஷ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அண்டை நாடான பங்களாதேஷ் இந்தியாவுடனான எல்லையை மூடியுள்ளது.‌

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

இதனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

இதன் காரணமாக பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.‌ இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அண்டை நாடான பங்களாதேஷ் இந்தியாவுடனான எல்லையை மூடியுள்ளது.‌

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஏகே அப்துல் மோமன் கூறுகையில், ‘‘இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் விரைவான அதிகரிப்பு காரணமாக இந்தியாவுடனான எல்லையை திங்கட்கிழமை முதல் 2 வாரங்களுக்கு மூடுகிறோம். அதே சமயம் இரு நாடுகளுக்கிடையில் சரக்கு வாகனங்கள் போக்குவரத்து அனுமதி வழங்கப்படும்’’ என்றார்.

முன்னதாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு கடந்த 14ம் திகதி  பங்களாதேஷ் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad