கேரள மாநில முதலமைச்சருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

கேரள மாநில முதலமைச்சருக்கு கொரோனா

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று (8) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகளுக்கு கடந்த 6ஆம் திகதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பினராயி விஜயனுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 3ஆம் திகதி பினராயி விஜயன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தற்போது பினராயி விஜயன் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முக்கிய உடல்நல சிக்கல்கள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள் தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad