அரச ஊழியர்களை பகுதியளவில் பணிக்கு அமர்த்த அனுமதி - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

அரச ஊழியர்களை பகுதியளவில் பணிக்கு அமர்த்த அனுமதி

அரச ஊழியர்களை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் வெளியாகுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கு அதிகாரம் குறித்த நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad