புதிய சுகாதார வழிகாட்டல்களை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

புதிய சுகாதார வழிகாட்டல்களை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது

கொரோனா தொற்று வைரஸால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (09) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பங்குபற்றலுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததன் மூலம் கொவிட்-19 நோயை கட்டுப்படுத்துவதில் நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி புதிய சுகாதார வழிகாட்டல்களை வகுப்பது தொடர்பாக இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு அதன் பின்னர் நாட்டிற்கு 6,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலாத் துறையின் ஊக்குவிப்புக்கு பங்களிப்பு செய்யும் 8 விடயங்கள் தொடர்பாக இங்கு முக்கியத்துவம் செலுத்தப்பட்டது.

மேலும் ஆயுர்வேத வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பெரும் வரவேற்பு உள்ளது. 

இதனால் சுகாதார மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் ஹோட்டலுடன் தொடர்புடைய மருத்துவரின் பங்களிப்புடன் முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், சுற்றுலாத் துறையின் ஊக்குவிப்புக்காக, சுற்றுலாத் துறை அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகளில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad