மதுவரித் திணைக்கள அதிகாரிகளிடம் சிக்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர்! - News View

Breaking

Post Top Ad

Saturday, March 20, 2021

மதுவரித் திணைக்கள அதிகாரிகளிடம் சிக்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மார்டீன் வீதி சந்தியில் வைத்து சந்தேக நபர் இன்று முற்பகல் 11.30 மணிக்கு கைது செய்யப்பட்டார் என்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பெறுமதியான 20 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கூறினர்.

சந்தேக நபர், போதைப் பொருள் கடத்திலில் ஈடுபடுவதுடன் சிறைக் கைதிகளுக்கு போதைப் பொருளை விநியோகிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad