ரயில்வே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.! - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.!

புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அமைச்சர் காமினி லொகுகேயுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நண்பகல் முதல் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த போதிலும், பயணிகளின் சிரமத்தை கருத்திற் கொண்டு, நேற்று மாலை அலுவலக ரயில்களை மாத்திரம் இயக்கியிருந்தன.

இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகேயுடன் இன்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad