சீனர்களுக்கு சிறப்புத் தடுப்பு மருந்து கடவுச்சீட்டு அறிமுகம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

சீனர்களுக்கு சிறப்புத் தடுப்பு மருந்து கடவுச்சீட்டு அறிமுகம்

சீனாவில் எல்லைகளைத் தாண்டிப் பயணம் செய்வோருக்கென சிறப்புத் தடுப்பு மருந்துக் கடவுச்சீட்டு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சுகாதாரச் சான்றிதழ் என்று அழைக்கப்படும் அந்தக் கடவுச்சீட்டு சீனக் குடிமக்கள் அனைவரும் விசாட் தளம் மூலம் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

நியுக்ளிக் பரிசோதனை, நோய் எதிர்ப்புச் சக்தி சோதனை முடிவுகள், தடுப்பூசி போடப்பட்ட விபரம் உள்ளிட்ட தகவல்கள் சான்றிதழில் இடபெறும்.

சான்றிதழின் உண்மைத் தன்மையைச் சரி பார்க்கவும் அதன் தகவல்களை வாசிக்கவும் சான்றிதழுடன் மறைச்சொல்லுடனான கியு.ஆர். குறியீடு வழங்கப்படும். 

தனது சுகாதாரச் சான்றிதழ் எதிர்காலத்தில் சர்வதேச பயணிகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று சீனா தெரிவித்தது.

தனி நபர் விபரங்களைப் பாதுகாப்பதோடு சுமுகமான முறையில் பயணம் செய்ய அது வகை செய்யும் என்று சீனா நம்புகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad