வர்த்தமானியில் 'புனர்வாழ்வளித்தல்' என்பதால் கருதப்படுவது என்ன? - மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

வர்த்தமானியில் 'புனர்வாழ்வளித்தல்' என்பதால் கருதப்படுவது என்ன? - மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட புனர்வாழ்வளித்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன, மத ரீதியான சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் வலுவிழக்கச் செய்யும் வகையில் அமைந்திருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஒவ்வொரு பிரஜையினதும், குறிப்பாக இன, மத ரீதியான சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் வலுவிழக்கச் செய்யும் வகையிலேயே மேற்படி வழிகாட்டல்கள் அமைந்துள்ளன. 

அத்தோடு மேற்படி வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல்களின் ஊடாக நீதித்துறையின் அதிகாரங்கள் சில நிறைவேற்றதிகாரத்திடம் கையளிக்கப்படல் உள்ளடங்கலாக அதிகாரங்களை வழங்குவதில் மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அத்தோடு மிகவும் மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் அதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கும் எடுக்கப்படும் முயற்சிகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானதாகும். 

மேலும் இந்த வழிகாட்டல்கள் சிவில் சமூகத்தின் சுதந்திரத்தின் மீதும் சட்டத்தின் ஆட்சி மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேவேளை இந்த மேலோட்டமான வழிகாட்டல்கள் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக 'புனர்வாழ்வளித்தல்' என்பதால் கருதப்படுவது என்ன என்பது குறித்து இங்கு தெளிவாக விளக்கமளிக்கப்படவில்லை. அதேபோன்று புனர்வாழ்வளிக்கும் நிலையங்களினால் எத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்படவில்லை.

No comments:

Post a Comment