யுவதிகளை பாலியல் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிய பெண்ணுக்கு விளக்கமறியலில் - News View

Breaking

Post Top Ad

Friday, March 12, 2021

யுவதிகளை பாலியல் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிய பெண்ணுக்கு விளக்கமறியலில்

பாலியல் தொழிலாளிகளாக யுவதிகளை ஓமான் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஓமானில் இருந்து வந்த இந்த பெண் குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்திருந்தனர்.

வவுனியா பம்பைமடு இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான பெண் கிரிகொல்ல கிராந்துருகோட்டே பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஆர்.எம். குசுமாவதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹியங்கனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்தி வந்துள்ள இந்த பெண், யுவதிகளுக்கு வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி, ஓமான் சுல்தான்களுக்கு சிறு தொகை பணத்திற்கு பாலியல் தொழிலாளிகளாக விற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad