“மொட்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன, இன்னும் மத்திய வங்கிக் கொள்ளையர்களும் இல்லை, ஈஸ்டர் தாக்குதலின் உன்மையான சூத்திரதாரிகளும் இல்லை” - ரன்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

“மொட்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன, இன்னும் மத்திய வங்கிக் கொள்ளையர்களும் இல்லை, ஈஸ்டர் தாக்குதலின் உன்மையான சூத்திரதாரிகளும் இல்லை” - ரன்சித் மத்தும பண்டார

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் இருந்தன. ஒன்று மத்திய வங்கிக் கொள்ளை மற்றையது ஈஸ்டர் தாக்குதலை தடுக்காமை ஆகியன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பாரிய பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு இனவாதம் தூன்டப்பட்டு தறபோது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என்று கேள்வி எழுப்பினார் பாராளுமன்ற உறுப்பினர் ரன்சித் மத்தும பண்டார.

இன்று (02) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரன்சித் மத்தும பண்டார அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று மத்திய வங்கிக் கொள்ளையர்களும் இல்லை. ஈஸ்டர் தாக்குதலின் உன்மையான சூத்திரதாரிகளும் இல்லை. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. என்றாலும் விசாரணைகளில் எந்தவித புதிய முன்னெடுப்புகளையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. 2019 செப்டம்பர் 22 ஆம் திகதி வரத்தமானி மூலம் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையே இன்று வெளிவந்துள்ளது.

விசாரணை அறிக்கையில் உன்மையான சூத்திரதாரிகள், பின்னனியில் இருந்து செயற்பட்டவர்கள், நிதி வழங்கியவர்கள், அரசியல் ஆதரவு வழங்கியவர்கள் என்று முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை. இதில் ஏதே இரகசியம் உள்ளது போல் தோன்றுகிறது. 

ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் எவ்வாறு பிரசாரம் செய்தனர். இன்று எவ்வாறு நடந்து கொள்கின்றனர். சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம் இதில் குறிப்பிடப்படவில்லை. இன்று வரை உயிருடன் இருக்கும் சாரா தொடர்பாக எந்த தகவல்களும் இதில் இல்லை. இதனால்தான் சம்பூர்ணமற்ற அறிக்கையாக நாங்களும் ஏனைய சகல தரப்பினரும் கூறுகின்றனர்.

சஹ்ரானிற்கு பாதுகாப்பு அமைச்சால் சம்பளம் வழங்கியது கோட்டாபய ராஜபக்‌ஷவாகும். கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போதுதான் இவர் புலனாய்வு அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.

இந்த விசாரணைகளை ஆரம்பமாக முன்னெடுத்த நாலக சில்வா, நாமல் குமார என்ற நபர் மூலம் ஜனாதிபதி உட்பட பிரபுக்கள் கொலை சதி முயற்சி உள்ளிட்ட காரணங்களக் கொண்டு கைது செய்தனர். ஈஸ்டர் தாக்குதலின் ஓர் நாடகமாகத்தான் நாம் இதைப் பார்க்கிறோம்.

நாலக சில்லவாவைத் தெடர்ந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபோயசேகரவின் மேல் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்துள்ளனர். இவற்றை அவதானிக்கும் போது சந்தேகம் எழுகிறது. ஏன் இத்தகைய ஓர் பயங்கரவாத தாக்குதலை மூடி மறைக்க முயல்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார்.

தேசிய செத்துக்களைப் பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று தேசிய செத்துக்களை விற்றவன்னமுள்ளனர். கிழக்கு முனையத்திற்கு பதிலாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 80% பங்கை இந்தியாவிற்கு வழங்கவுள்ளனர். இது கிழக்கு முனைய நாடகத்தை ஆடி மேற்கு முனையத்தை சூட்சுமமாக வழங்கியுள்ளனர்.

மொனராகல மாவட்டத்தில் 10000 ஏக்கர் நிலம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹம்பந்தோட்டை துறைமுகத்தை சூலவுள்ள இடங்கள் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஷங்ரிலாவை அன்மித்த இடம் விற்க்கப்பட்டுள்ளது. கூடியளவு தேசிய வழங்களை விற்ற அரசாங்கமாக இந்த அரசாங்கம் காணப்படுகிறது. லலித் அத்துலத் முதலி தலைமையில் துறைமுகங்களை நாங்கள் அபிவிருத்தி செய்த வரலாறுகள்தான் எமக்குண்டு.

1947, 1972 மற்றும் 1978 ஆகிய மூன்று சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பு வரைவிற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டன. இன்று பொஹோட்டுவ தம்மைச் சூழவுள்ள சில சட்டத்த்ணிகளை மாத்திரம் அங்கத்தவர்களாகக் கொண்டு புதிய அரசியல் அமைப்பு வரைவை முன்னெடுக்கின்றனர்.

மூன்றில் இரண்டு பொருன்பான்மையை வைத்துக் கொண்டு சில திருத்தங்களுடன் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்த அரசாங்கத்தால் முடியும். ஆனால் தேர்தலை இழுத்தடிக்கின்றனர் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்களுக்கு தயார் என்றும் மோலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment