சகல குடியிருப்புகளுக்கும் துரிதமாக மின்சார வசதி - அமைச்சர் ஜீவன் - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

சகல குடியிருப்புகளுக்கும் துரிதமாக மின்சார வசதி - அமைச்சர் ஜீவன்

மின்சார வசதியற்ற தோட்டப்பகுதி மக்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக இலகுவில் மின்சாரத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்திற்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் பதுளை மாவட்ட பிரதேச செயலகத்தில் நேற்று (19) நடைபெற்றது.

இதன்போது பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு அபிவிருத்திகள் மற்றும் உட்கட்டமைப்பு, அது தொடர்பிலான பிரச்சினைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி, உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது பெருந்தோட்டப் பிரதேசங்களில் காணப்படும் மக்கள் குடியிருப்புகளுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும்போது தோட்ட நிர்வாகம் தாமதமாக்குவதால் மக்கள் பல்வேறு அசௌகரிகங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது என்ற முறைப்பாட்டை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் நேரடியாக முறையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்விடயம் தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடி இனிவரும் காலங்களில் தோட்டங்களுக்கு மின் இணைப்பை மிக விரைவாக அரசாங்கத்தின்னூடாக பெற்றுத்தருவதாக உறுதியளித்தார் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad