வடக்கில் ஏற்பட்ட மின் தடைக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் : இலங்கை மின்சார சபை - News View

About Us

About Us

Breaking

Friday, March 12, 2021

வடக்கில் ஏற்பட்ட மின் தடைக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் : இலங்கை மின்சார சபை

தொழில்நுட்பக் கோளாறினாலேயே வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் அண்மையில் மின்சார விநியோகம் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

மின் விநியோகம் தடைப்பட்டமை குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடந்த 8 ஆம் திகதி இரவு மின் மின் விநியோகம் தடைப்பட்டது.

திடீரென ஏற்பட்ட மின் தடை குறித்து அண்மையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விசாரணைகளுக்காக விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.

அனுராதபுரம் புதிய க்ரீட் உப மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், கடந்த 8 ஆம் திகதி இரவு 7 மணியளவில் மின் விநியோகம் தடைப்பட்டது.

சுமார் 2 மணித்தியாலங்கள் வரை, மின் விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களைத் தவிர, வாழைச்சேனை, ஹபரணை, பொலன்னறுவை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலுள்ள உப மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கும் அன்றைய தினம் மின் தடை ஏற்பட்டது.

No comments:

Post a Comment